ஜேர்மன் கைதிகளை விடுதலை செய்த உக்ரைன்

உக்ரைன் நாட்டில் வேவு பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 4 ஜேர்மனியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.உக்ரைனில், கடந்த சனிகிழமை அன்று ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பை சேர்ந்த 4 ஜேர்மனியர்களை வேவு பார்ப்பவர்கள் என கூறி பிணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது அவர்களை விடுவிக்க போவதாக ச்லாவாங் நகரத்தின் மேயர் வாச்செஸ்லெவ் போனோமரவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட விருந்தாளிகள் அவர்கள் எனவே அவர்களை விடுவிக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

ஜேர்மன் அரசாங்கம் எந்த காரணமும் இன்றி அவர்களை கைது செய்ததாக கூறி கடிமையாக கண்டித்துள்ளது.