குளியாபிட்டி, தும்மலசூரிய, பிங்கிரிய, ஹெட்டிபொல ஆகிய பகுதிகளில் முஸ்லீம் கடைகள் மீதும், பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல்கள்

 

கம்பஹா மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும்வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தினையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்.

வட மேல்மாகாணத்தின் சிலாபம் பகுதியில் நேற்றைய தினம் முஸ்லீம் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவை அடுத்து வன்முறைகள் வெடித்திருந்தன. இதற்கமைய அங்கு ஊரடங்கு அனுமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து குருநாகல் மாவடட்த்தின் குளியாபிட்டிய பகுதியில் நேற்றைய தினம் இரவு முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளவாயில்களை இலக்கு வைத்து தாக்குதலொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதுது குளியாபிட்டிய நகரிலுள்ள முஸ்லீம்களின் மூன்று வர்த்தக நிலையங்களும், குளியாபிட்டி மற்றும் அதனைசூழவுள்ள கிராமங்களில் ஐந்து பள்ளிவாயில்களும் தாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கும் இன்று காலை வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றும் குளியாபிட்டி, தும்மலசூரிய, பிங்கிரிய, ஹெட்டிபொல ஆகிய பகுதிகளில் முஸ்லீம் கடைகள் மீதும், பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து முதலில் ஆறு பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் நிலமை மோசமானதை அடுத்து வட மேல் மாகாணம் முழுவதும் நாளை காலை ஆறு மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே கம்பஹா மாவட்டத்தில் முஸ்லீம்கள் வாழும் நகரங்களில் ஒன்றான மினுவெங்கொட பகுதியில் முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் நிலையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில நாட்களாக தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்றைய தினம் இரவு 9.00 மணி முதல் நாளை அதிகால நான்கு மணி வரை நாடு தழுவிய ரீதியிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் வணிகசேகர அறிவித்துள்ளார்.

About Thinappuyal News