பிரான்ஸ் தீவில் சுறாவுக்கு பலியான இளைஞர்

9

பிரான்சுக்கு சொந்தமான தீவு ஒன்றில் எச்சரிக்கையை மீறி சர்பிங் சென்ற இளைஞர் ஒருவர் பரிதாபமாக சுறாவுக்கு பலியானார்.

பிரான்சுக்கு சொந்தமான ரீயூனியன் தீவில் தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் இளைஞர் ஒருவர் சர்பிங் சென்றபோது இந்த சோக சம்பவம் நடைபெற்றது.

அந்த சுறா அவரது கால்களில் ஒன்றை கடித்து சென்றதாக பிரான்ஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த பகுதியில் நின்றிருந்த ஒருவர் அந்த இளைஞர் முற்றிலும் தண்ணீருக்குள் மூழ்குவதையும், அவரது சர்பிங் போர்டு தண்ணீரில் மிதப்பதையும் கண்ணால் கண்டுள்ளார்.

உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த இளைஞருடன் சர்பிங் செய்து கொண்டிருந்த மூன்று பேர் பத்திரமாக கரை திரும்பினர்.

2011 முதலே ரீயூனியன் பகுதியில் சுறாக்களால் தாக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, சுறா தொல்லை அதிகம் இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறி வந்தனர்.

கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 24 சுறா தாக்குதல்கள் நடந்துள்ளன, அவற்றில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலோர் சர்பிங் விளையாடச் சென்றவர்கள். இதனால் உள்ளூர் மக்கள் அப்பகுதியில் எச்சரிக்கை பலகை ஒன்றையும் வைத்துள்ளனர்.

அதையும் மீறி சர்பிங் சென்றதாலேயே அந்த இளைஞர் உயிரிழக்க நேரிட்டது எனலாம்.

SHARE