கொழும்பில் திடீர் தீப்பரவல்!

கொழும்பு – புறக்கோட்டை மெனிங் மார்க்கட் பகுதியில் இடம்பெற்ற திடீர் தீப்பரவலினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

மெனிங் மார்க்கட் பகுதியின் கட்டடமொன்றில் இன்று முற்பகல் இந்த தீப்பரவல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அங்கிருந்தவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அதேவேளை இந்த தீப்பரவலினால் எந்தவித உயிர் சேதமோ, சொத்து சேதங்களோ ஏற்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News