விபத்தில் ஒருவர் பலி ஒருவர் காயம்

ஹபரணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுராதபுரம் – பொலன்னறுவை பிரதான வீதியில் அனுராதபுரம் நோக்கி சென்ற லொறி சாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் எதிர் திசையில் வந்த தனியார் பஸ் மற்றும் டிபர் வாகனத்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலத்தக்காயங்களுக்குள்ளான லொறி சாரதி உட்பட இருவர் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைதத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த 51 வயதுடைய ஜயசூரிய சோம செனவிரத்தன என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்டதுடன் மேலதிக விசாரணையை ஹபரணை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

About Thinappuyal News