நீச்சல் வீரர் விபத்தில் பலி

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் விபத்தில் பலி

அமைந்தகரை ஷெனாய் நகர் ஜெயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 29). நீச்சல் வீரர்.

இவர் கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஆசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றனர் ஆவார். அமெரிக்காவில் தங்கி இருந்த பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார்.

நேற்று இரவு அவர் நண்பர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி எதிரே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரியைச் பாலகிருஷ்ணன் முந்தி செல்ல முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளோடு தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுப்பிரமணியன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Thinappuyal News