சரும பராமரிப்புக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்

எப்போதும் ஆரோக்கியமான உணவுகள் இயற்கையில்தான் கிடைக்கின்றது.

பழங்கள், சாலட், முளைக்கட்டிய தானியங்கள், பருப்புகள், விதைகள், கொட்டைகள் மற்றும் தயிர் ஆகியவை இயற்கையான உணவுகள். உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரக்கூடியவை. இவையே நம் தினசரி உணவில் அதிகளவு இருக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

குறிப்பாக, கொழுப்பு மற்றும் இனிப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இந்த இயற்கை உணவுகள் உங்கள் சருமத்தை இளமை தோற்றத்துடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும்.

கொழுப்பு, சர்க்கரை மற்றும் இறைச்சி ஆகியவற்றை குறைத்து, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம். சரும ஆரோக்கியத்திற்கு யோகர்ட், ஸ்கிம்டு மில்க் மற்றும் பன்னீர் ஆகியவை சிறந்தது. காய்கறிகளை எப்போது முழுமையாக வேக வைக்கக்கூடாது. கீரைகள் மற்றும் லீட்யூஸ், சூப் ஆகியவற்றை சாப்பிடலாம்.

அந்தந்த பருவநிலை மாற்றத்தின்போது விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது சிறந்தது. கோடை காலத்தின்போது உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால் தர்பூசணி, முலாம்பழம் மற்றும் வெள்ளரி ஆகியவற்றை சாப்பிடலாம். நீராகாரம் அதிகம் உட்கொண்டால் மட்டுமே, இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

About Thinappuyal News