பெண்ணின் கருப்பையில் பைக்கின் உதிரிபாகம்

இந்தியாவில் பெண்ணின் கருப்பையை சோதனை செய்த போது, உள்ளே பைக்கின் உதிர்பாகம் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அதற்கு காரணமான கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் தார் என்ற பகுதியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த பெண்ணிற்கு கடந்த சில மாதங்களாகவே கடுமையான வயிற்று வலி இருந்துள்ளது.

இதனால் அவர் அங்கிருக்கும் மருத்துவமனைக்கு சென்று சோதித்த பார்த்த போது, அவரின் கருப்பையில் பைக்கைப்பிடியின் உடைந்த 6 இன்ச் பகுதி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கும் அவரது கணவருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்ததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதையும், அந்த பெண்ணை அவருடைய கணவர் பல நேரங்களில் அடித்து சித்ரவதை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே போன்று ஒருநாள் நடந்த சண்டையின் போது(இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) கணவர் அவரை கடுமையாக தாக்கியதோடு மட்டுமின்றி, பெண்ணின் முக்கிய உறுப்பில் பைக்கின் கைப்பிடியை சொருகியுள்ளார்.

ஆனால் இதைப் பற்றி அந்த பெண் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். ஆனால் தற்போது மருத்துவசோதனையில் தெரியவந்ததால், பொலிசார் அவரின் கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About Thinappuyal News