உலகிலேயே பாலியல் தொழிலை அங்கீகரித்த ஒரே முஸ்லீம் நாடு பங்கலாதேஷ் தான்.

 

உலகிலேயே மிகப்பெரிய அளவில் பாலியல் தொழில் நடக்கும் இடம் இது தான்!   உலகிலேயே பாலியல் தொழிலை அங்கீகரித்த ஒரே முஸ்லீம் நாடு பங்கலாதேஷ் தான். இங்கே பாலியல் தொழில் செய்ய சட்டப்படி அனுமதியுண்டு, இங்கு செயல்படும் ராஜ்பாரி பகுதியில் இருக்கக்கூடிய டால்ட்டியா ப்ராத்தல் தான் உலகிலேயே பாலியல் தொழில் நடக்கூடிய மிகப்பெரிய இடமாக இருக்கிறது. இங்கே கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 2500 முதல் 3000 ஆண்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த ராஜ்பாரி பகுதியில் தொடர்ந்து அடிக்கடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை நடந்திருக்கிறது, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்தப் பகுதியில் பாலியல் தொழிலாளர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. உலகிலேயே மிகப்பெரிய பாலியல் தொழிலாளர்கள் இருக்கும் இடம் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்  இங்கே பாலியல் தொழிலாளியாக நீங்கள் பணியாற்ற வேண்டுமெனில் உங்களுக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும். ஆனால் பதினெட்டு வயதுக்கும் குறைவான பெண்களும் இங்கே இருக்கிறார்கள். பாலியல் தொழிலாளர்கள் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் இங்கேயே இருக்கிறார்கள்.

அவர்கள் போதை மருந்து கடத்தல் உட்பட பல சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்கிறார்கள். இங்கே பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு மிக குறைவான கூலியே கொடுக்கப்படுகிறது. Image Courtesy #3 பங்கலாதேஷில் இருக்கக்கூடிய ராஜ்பரி என்ற இடம் ரயில்வே பாலத்திற்கு மிக அருகில் இருக்கிறது. அதனால் ரயில் பயணிகள், மற்றும் நீண்ட பயணம் மேற்கொள்கிறவர்கள் அடிக்கடி இந்த இடத்திற்கு வந்து செல்கிறார்கள்.

இங்கிருக்கும் பெண்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு விஷயங்களை முன்னெடுக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் ஸ்டிராய்டு. அங்கே மருந்துகங்களில் எல்லாம் சர்வ சாதரணமாக இந்த ஸ்டிராய்டு கிடைக்கிறது, அதனை சாப்பிட்டவுடன் முகம் சற்று வீங்குகிறது, இதனால் தாங்கள் வெளிரிப்போய் நிறமாகவும் அழகாகவும் தெரிவோம் என்று நம்புகிறார்கள் அந்த பெண்கள்.  ராஜ்பாரி பகுதியிலேயே பாலியல் தொழிலாளர்களுக்கு என்றே மயானம் இருக்கிறது, இங்கே இறக்கும் பாலியல் தொழிலாளர்களை அங்கேயே புதைக்கிறார்கள். பெரும்பாலும் எந்த நினைவுக்கல் வைப்பதில்லை, புற்கள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது.

அங்கே பாலியல் தொழிலாளியாக ரபேகாவின் கதை பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கிறது. இருபத்திஎட்டு வயதான ரபேகா எட்டு மாத கர்ப்பமாக இருக்கிறார். இன்னமும் அவருக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  கர்ப்பமாக அதுவும் எட்டு மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறார் என்பதற்காக எல்லாம் எந்த வித்யாசமோ அல்லது சலுகையோ காட்டப்படுவதில்லை, எல்லா பெண்களையும் போலவே தொடர்ந்து வருகின்ற க்ளைண்ட்களை கவனிக்க வேண்டும், அதே குறைந்த கூலியே வழங்கப்படும்.

பருவ வயதை அடைந்தவுடன் வீட்டினர் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள், பதினைந்து வயதில் கணவனால் இங்கே கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார் ரபேகா. அதன் பிறகு மகளைக் காணாமல் தேடிய ரபேகாவின் தாய் இங்கிருந்து மீட்டுச் சென்றிருக்கிறார்.  அதன் பிறகு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வீட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அந்த வீட்டினருக்கு எப்படியோ, ரபேகாவின் முன்னால் கதை தெரியவரவே அவர்கள் ரபேகாவை பாலியல் ரீதியாக சீண்ட ஆரம்பித்தார்கள். தொடர்ந்து டார்ச்சர் அதிகரித்ததால் வேறு வழியின்றி அங்கிருந்து தப்பி வந்தார்.

வறுமையினால் பெற்றோரும் சேர்த்து கொள்ள மறுக்க, வேறு வழியின்றி மீண்டும் ராஜ்பரிக்கே சென்று பாலியல் தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறார் ரபேகா, இப்படி குடும்ப சூழ்நிலையினால் ஏராளமான பெண்கள் இங்கே பாலியல் தொழிலாளியாக மாறி நிற்கிறார்கள்.  அங்கே கடைகளில் சர்வ சாதரணமாக வயகாரா கிடைத்திடும். சாதரண பெட்டிக் கடைகளில் கூட வயகராவை வைத்திருப்பார்கள். காண்டம் இருந்தாலும் பெரும்பாலும் வருகின்ற கஸ்டமர்கள் அதனை விரும்புவதில்லையாம், சில பெண்கள் மட்டும் கண்டிப்பாக காண்டம் அணிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

இங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு தங்களுடைய தந்தை யார் என்பதே தெரியாது, இங்கு பெண்களுக்கு என்று தனித்தனியாக வீடு ஒதுக்கப்படுகிறது, அங்கே கூட்டமாக இவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள்.  இவர்கள் சிறு சிறு குழுக்களாக செயல்படுகிறார்கள், ஒவ்வொரு குழுவிற்கும் தலைவர் என்ற பொறுப்பில் சற்று வயதான பெண்மணி இருக்கிறார். இவர் தான் வருகிற கஸ்டமர்களை பிரித்து அங்கிருக்கும் பெண்களுக்கு அனுப்புகிறார். அதோடு அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதும் அவர் தான்.  சில பெண்கள் தங்களது குழந்தைகளை அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறார்கள், தங்களது சூழல் குழந்தைகளை பாதிக்க கூடாது என்ற எண்ணத்தில் தங்களது குழந்தைகளையே பிரியக்கூட துணிகிறார்கள். இந்த ராக்பரியை ஒட்டி கழிவு நீர் குட்டை ஒன்று இருக்கிறது, இங்கே பயன்படுத்திய காண்டம் உட்பட பல்வேறு பொருட்கள் வீசப்படுவதால் பெரும்துர்நாற்றம் வீசும் இடமாக இருக்கிறது.  இங்கே சிறுமிகள் பருவவயதினை எட்டுவதற்கு முன்னாலேயே சிலர் வந்து விடுகிறார்கள்.

சில நேரங்களில் கடத்தி கொண்டு வரப்படுவதும், பெற்றோராலேயே கொண்டு வந்து விடப்படுவதும் உண்டு. இங்கே பலரும் யாபா என்ற ஒரு வகை போதை மருந்திற்கு அடிமையாய் இருக்கிறார்கள். Image  இது மியான்மரிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக கடத்தி வருகிறார்கள்.அங்கே தான் இந்த யாபா உற்பத்தி செய்யப்படுகிறது. பங்களாதேஷினை பொருத்தவரையில் வட்டமான முகம் கொண்டவர்களே அழகானவர்களாக கருதப்படுகிறார்கள்.

இங்கே ஏராளமான நைட் க்ளப்புகளும் செயல்படுகிறது. இங்கே மது அருந்தவும், பாலியல் தொழிலாளர்கள் தங்களுக்கு என தனிப்பட்ட முறையில் நடனமாடவும் கேட்டு ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். வருகின்ற வாடிக்கையாளர்களுக்கும்,பெண்களுக்கும் அடிக்கடி விலை பேசுவதில் வாக்குவாதங்கள் நடக்கிறது.

பெரிய சந்தையை போல இருக்கும் இந்த பகுதியில் கேம்ப்லிங் ஹால் என்ற இடம் இருக்கிறது அங்கே வைத்து தான் விலை பேசி நிர்ணயிக்கப்படுகிறது, அங்கே தான் வருகின்ற கஸ்டமர்கள் காத்திருக்கிறார்கள். அங்கே விலை பேசி முடிவு செய்யப்பட்ட பிறகே அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

About Thinappuyal News