அவசர நிலை பிரகடனத்தில் ட்ரம்ப் கையொப்பம்

அமெரிக்கா தகவல் தொழில் நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனத்தில் அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

வாஷிங்டனில் உள்நாட்டு பாதுகாப்புக்கு ஆபத்தாக உள்ள நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தொலை தொடர்பு சாதனங்களை,அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் அவசர நிலை பிரகடனத்தில், அந்த நாட்டு அதிபர், ட்ரம்ப், நேற்று கையெழுத்திட்டுள்ளார்.

சமீப காலமாக, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் அதிகரித்துள்ளது.

சீனப் பொருட்களுக்கு, அமெரிக்காவில் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது.

இதற்கு பதிலடியாக, சீனாவும், அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரியை விதித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில்,தொலை தொடர்பு சம்பந்தமான தொழில்களில், சீன நிறுவனங்களின் பங்கு குறைவாக உள்ளது.

இந் நிறுவனங்களுக்கு நெருக்கடி தரும் வகையில், அமெரிக்காவின் தொழில்நுட்பம் திருடப்படுவதை தடுப்பதற்காக, தேசிய அவசர நிலை பிரகடனத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நேற்று கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில அன்னிய நாட்டு நிறுவனங்களால்,அமெரிக்க தொழில்நுட்பம் திருடப்படுவதால், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுஉள்ளது.

இதை தடுக்கும் வகையில், தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Thinappuyal News