முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இறுதி முடிவு அல்ல..! அது தமிழீழத்தின் ஆரம்பம்…!

ஒரு தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய ஒரு தமிழினத்தை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அழித்தொழிக்கும் நோக்கிலேயே சிங்கள இனவாத அரசு செயற்பட்டு வந்தது. குறிப்பாக டட்லிசேனநாயக்கா தொடக்கம் மைத்திரிபால சிறிசேனா வரை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இவ்வாறே நடந்துள்ளனர். முன்னால் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்புயோசப்பு அவர்கள் தெரிவித்த கருத்தின்படி ஒரு லட்சத்தி நாற்பத்தி நான்காயிரம் (144,000)மக்கள் கடந்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர் என்று குறிப்பிட்டிருந்தார்.  இது தொடர்பாக தினப்புயல் ஊடக நிறுவனம் மூன்று வருடங்களுக்கு முன்னர் அவரிடம் ஒரு நேர்காணலைக் கண்டிருந்தது. அதை எமது http://www.thinappuyalnews.com இல் காணலாம். யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில்
இன்னமும் தமிழினத்திற்கான தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் வழங்கவில்லை என்றால் தொடர்ந்தும் தமிழினம் ஆயுதம்
ஏந்திப் போராடும் நிலைக்கே தள்ளப்படுகின்றார்கள். ஏற்கனவே உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது தான் இந்த
ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஒரு நாட்டினுடைய அரசியல் பொருளாதாரம் என்பது ஐந்து ஆண்டுகள், அல்லது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் பெறும். சர்வதிகார நாடுகளைப் பொறுத்தவரையில் உள்ளுர்போராட்டங்களினாலேயே அவர்களுடைய பொருளாதாரத்தை அல்லது வயித்துப் பசியைப் போக்கி வருகின்றார்கள். அந் நாட்டுக்குள் குழப்பங்களை விளைவித்து அந் நாட்டுக்குள் ஆயுத விற்பனையை மேற்கொள்ளுகின்றார்கள். ஆசியாவில் இருக்கக் கூடிய கேந்திர முக்கித்துவம் வாய்ந்த இலங்கையை தமது இராணுவத் தளமாகவும், புலனாய்வுத் தளமாகவும் இந் நாடுகள் பாவித்து வருகின்றது. இதற்கு இலங்கையில் இருக்கக் கூடிய தமிழினத்தைப் பயன்படுத்தில் ஒரு இனத்தின் விடுதலைக்காப் போராடிய விடுதலைப் புலிகளை சர்வதேச நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. இதன் விளைவாக தமிழீழ விடுதலைப்புலிகளுடைய ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியது ஆனாலும் நாடு கடந்த தமிழீழ அரசு இயங்கிக் கொண்டு தான் இருந்தது. ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் வரை கொண்டு செல்லப்பட்ட அப்பவித் தமிழ் மக்களைக் கோரபடுகொலை செய்யப்பட்ட நாளைத் தான் மே18 என மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.

தொடர்ந்து தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுமாக இருந்தால் முள்ளிவாய்காலில் முடிவடைந்த யுத்தம் அது முடிவல்ல அது தமிழீழத்தின் ஆரம்ப நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதனை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். அமைச்சர் ரிஷாட் பதியூதினை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதினால் ISIS தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்திவிட முடியாது..! இலங்கையில் ISIS தீவிரவாதம் என்பது தற்பொழுது ஆரம்பமாகி இருக்கின்றது. இவர்களுடைய செயற்பாடுகள் என்பது  உள்ளுர் முஸ்லீம் தீவிரவாத அமைப்போடு ஒன்று பட்டதாகவே காணப்படுகின்றது. இவற்றை இல்லாதொழிப்பதற்கு சர்வதேசரீதியான முன்னெடுப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டால் மட்டுமே ISIS தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும். அமெரிக்கா, ஸ்ரேல் போன்ற நாடுகள் தமது சர்வதேச பயங்கரவாதத்தை ISIS தீவிரவாதிகளுடன் இணைந்து செயற்படுத்துகின்றார்கள். இவர்களுடைய வலையமைப்புத் தெரிந்தும் இதனை ஏன் கட்டுப்படுத்த இலங்கை அரசு தயங்குகின்றது. என்ற சந்தேகம் இன்னமும் வழுப்பெறுகின்றது. இலங்கை இராணுவம், நேவி, CID, TID போன்றவர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டிருக்கின்றது. மீண்டும் இப்புலனாய்வுக் கட்டமைப்புக்களை கட்டியெழுப்பவேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஆளுனர் கிஸ்புல்லா, அமைச்சர் ரிஷாட் பதியூதின் போன்று இருபது பாராளுன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் அனைவரையும்ISIS தீவிரவாதிகள் என்ற கண்னோட்டத்தில் பார்ப்பது தவறு, சர்வதேச ரீதியல்  அமெரிக்காவுக்கும் எவ்வாறான தொடர்புகள் இருப்பது பற்றி அனைத்து ஊடகங்களும் இதனை வெளிப்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக தமிழினத்திற்கு நடந்த இனப்படுகொலையினை இன் நாட்டில் மூடி மறைப்பதற்காகISIS தீவிரவாதிகளை அமெரிக்கா இந் நாட்டுக்குள் களமிறக்கி இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்ற விடையத்தை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துகின்ற ஒரு சுட்சுமமான நடவடிக்கையாகவே இதனைப் பார்க்கவேண்டியிருக்கின்றது.

அமைச்சர் ரிஷாட் பதியூதினைப் பொறுத்தவரையில் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துக் செல்வதால் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிங்களப் பேரினவாதிகள் அவர் மீது ISIS தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகவும், சொத்துக்கள் குவித்திருக்கின்றார் என்றும் சொப்பின் பையுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர் எவ்வாறு திடீர் பணக்காரராக வந்தார் என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றது. உள்ளுர் விடையங்களை உள்ளுர் விடையங்களாகவே பார்க்கவேண்டிய தேவை இருக்கின்றது. ISIS தீவிரவாதத்தை அழிப்பதாக களமிறங்கியிருக்கின்ற அமெரிக்கா தற்பொழுது இலங்கையில் இருக்கக் கூடிய முஸ்லீம்களை அழித்தொழிக்கும் செயற்பாட்டிலேயே களமிறங்கியிருக்கின்றது. இலங்கை திருநாட்டை மீண்டுமொரு யுத்த சூழ்நிலைக்குள் கொண்டு செல்வதுக்கு முயற்சி செய்கின்றது. மொட்டைத் தலைக்கும்  முழங்களுக்கும் முடிச்சுப் போடுகின்ற ஒரு செயற்பாட்டையே அமெரிக்கா உளவு செயற்பட்டு வருகின்றது.

அதற்கு இரையாகிய இலங்கை அரசு செய்வதறியாது திகைத்து நிக்கின்றது. சர்வதேச ரீதியாக இத் தீவிரவாதத்தை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். அல்லது சீன காளனித்துவத்தை இந் நாட்டிற்குள் தினிப்பதற்கு முயல்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. இலங்கையில் வாழ்கின்ற முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் ஒட்டுன்னிகலாக செயற்படடு வந்தது தான் வரலாறு அது மட்டுமின்றி காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தியது என்று கூறலாம். இதைத் தவிர தமிழனத்தின் விடுதலைப் போராட்டத்தில் குளிர் காய்ந்து தமக்கான ஒரு இனத்தை பெற்றுக் கொண்டவர்கள் தான் இவர்கள். குறிப்பாக இவர்களை வந்தேறு குடிகள் என்று கூறலாம்;. இவர்களுடைய செயற்பாடுகள் ஆரம்பத்தில் ஒரு மௌனிப்பைக் கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது ISIS தீவிரவாதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதன் விளைவு தான் தற்பொழுது ஒட்டு மொத்த இஸ்லாமியர்களையும் தீவிரவாதிகளாக பார்க்கின்ற ஒரு கண்ணோட்டத்திற்குள் கொண்டு சென்றிருக்கின்றது. ஆகவே சிறுபாண்மை இனமாக நாம் பிரிந்திருப்பதை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து மாகானசபை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு குடையின் கீழ் இருந்து செயற்படுவதை எதிர்காலத்தில் சிறுபாண்மை சமூகத்திற்கான சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இல்லையேல் முஸ்லீம் மக்களுக்கு அரபு நாடுகள் கூட அரசியல் தஞ்சம் வழங்காது. என்பதனை நாங்கள் சுட்டிக் காட்டுகின்றோம்.

About User2