திருச்சியில் தொடர்ச்சியாக ஒரு மணிநேரம் 161 அம்புகளை ஏய்து இரண்டு வயதுப் பெண் குழந்தை சாதனை!

திருச்சி சீனிவாச நகரைச் சேர்ந்தவர் சாகய விஜய் ஆனந்த் – ஜெயலட்சுமி தம்பதியினரின் இரண்டு வயதுப் பெண் குழந்தை ஆராதனா.

சகாய விஜய் ஆனந்த் திருச்சி கோட்ட ரயில்வே திணைக்களத்தில் நுழைவுச்சீட்டு பரிசோதகராக கடமையாற்றி வருகிறார்.

விளைாயட்டில் ஆர்வமிக்க அவரது மகள் ஆராதானாவுக்கு கடந்த மூன்று மாதங்களாக வில்வித்தை பயிற்சி அளிக்கப்பட்டது.

அவருக்கு ராக்போர்ட் வில்வித்தை கழகப் பயிற்சியாளர் ராஜதுரை பயிற்சியளித்தார்.

இந் நிலையில் வில்வித்தையில் சாதனை படைக்கும் நிகழ்ச்சி பிரபல்யங்கள் முன்னிலையில் திருச்சி ரயில்வே மண்டபத்தில் இடம்பெற்றது.

10 மீற்றர் தூர்த்திலிருந்து குறிப்பிட்ட இலக்கினை ஆராதன தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் வில்லிருந்து அம்புகளை ஏய்தார். இன்னும் முழுமையாக பேசத் தெரியாத அக் குழந்தை ஆராதான, எவ்வித அச்சமுமின்றி ஒரு மணிநேரம் தொடர்ச்சியாக 161 அம்புளை ஏய்து, 355 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்தார்.

ஏற்கனவே ஆராதன கடந்த பெப்ரவரி மாதம் சென்னையில் நடந்த வில்வித்தைப் போட்டியில் 6 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று மூன்றாவது இடத்தைச் தட்டிச் சென்றார்.

10 வயதில் செய்யக்கூடிய வில்வித்தை இலக்கினை இரண்டு வயதில் ஆராதனா செய்துள்ளார் என்றும், இந்த வயதில் மூன்று மீற்றர் தூரம் தான் இலக்கு நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்த நடுவர் குழுவினர், ஆராதனா 10 மீற்றர் தூர இலக்கினை நோக்கி அம்பு ஏய்த நிகழ்வு உலக சாதனை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News