விஜய் 64 படம் குறித்து வதந்தி பரப்புகிறார்கள் பிராடு பசங்க- பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர்

விஜய்யின் 63வது பட ஷுட்டிங் இப்போது தான் நடந்து வருகிறது. அதற்குள் தளபதியின் அடுத்த படம் குறித்து செய்திகள் வெளியாக ஆரம்வித்துவிட்டன.

அடுத்தப்படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் அதில் விஜய் கேங்ஸ்டர் என்றும் கூறினர். மேலும் அனிருத் இசையமைக்க விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார் என்றனர்.

பல செய்திகள் வந்த அதே நேரத்தில் பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரும் விஜய் 64வது படத்தில் நடிக்கிறார் என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் பிரியா பேசும்போது, இது சுத்தமாக வதந்தி தான், யாரோ வேண்டுமென்றே பரப்புகிறார்கள் ஃபிராடு பசங்க என ஜாலியாக கூறியுள்ளார்.

About Thinappuyal News