ஏமனில் சவுதி அரேபியா கூட்டுப்படைகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் 6 பேர் பலி

ஏமனில் சவுதி அரேபியா கூட்டுப்படைகள் மேற்கொண்ட வான்வெளித் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏமன் நாட்டின் தலைநகரான சனா, ஹவுத்தி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் குழாய்கள் மீது ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் 2 நாட்களுக்கு முன்னர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் நேற்று சனா பகுதியில் திடீரென தாக்குதல் மேற்கொண்டன.

இதில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு, 10 பேர் காயமடைந்தனர்.

 

அத்தோடு குறித்த வான்வெளித் தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News