தலவாக்கலையில், ஆண்,சடலம், மீட்பு

10

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – பதுளை புகையிரத வீதியில் 23 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது .

தலவாக்கலை ஹொலிருட்  பகுதியில் ரயில்வே பாதையில் குறித்த ஆணின் சடலம் கிடப்பதை கண்ட பிரதேச மக்கள் தலவாக்கலை பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர் .

தலையில் பலத்த காயங்களுடன் காதுகளில் இரத்தம் கசிவு காணப்பட்டதையடுத்து குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது புகையிரதத்தில் மோதுண்டிருக்கலாம்  என பொலிஸார் சந்தேகிப்பதாகக்  தெரிவித்துள்ளனர்.

இச்  சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொளண்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதியிலேயே இளைஞனின் சடலம் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளதோடு தலவாக்கலை பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹொலிரூட் கீழ் பிரிவை சேர்ந்த பெனடிக் பிரசாந்த (23)  என்பவரின் சடலம் என ஆரம்ப கட்ட விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

SHARE