ஹோலோகிராம் கணினி அறிமுகம்!

40

புதிய பொருட்களை வடிவமைப்பது முதல், கணினி விளையாட்டுகள் வரை பலவற்றுக்கும், இப்போது ஹோலோகிராம் எனப்படும்முப்பரிமாண பிம்பத் தொழில்நுட்பம் பயன்படத்துவங்கி உள்ளது.

இந்நிலையில், ‘லுக்கிங் கிளாஸ் பேக்டரி’ என்ற நிறுவனம் முதல் முறையாக ஹோலோகிராம் திரை கொண்ட பிரத்யேக கணினியை அண்மையில் அறிமுகப்படுத்தி உள்ளது. ‘லுக்கிங் கிளாஸ் புரோ’ மருத்துவம், பொறியியல் வடிவமைப்பு, கணினி விளையாட்டு உள்ளிட்ட பல துறையினருக்கு, இப்படி ஒரு கணினி மிகவும் தேவையாக இருப்பதாக, இதை வெளியிட்ட அந்நிறுவனத்தின் அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்து உள்ளனர்.

இன்டெல் என்.யு.சி.,சில்லை அடிப்படையாகக் கொண்ட லுக்கிங் கிளாஸ் புரோ கணினியில், ஒரு பெரிய திரையும், பக்கவாட்டுத் திரையும் உள்ளன. திரையில் முப்பரிமாணத்தில் தெரியும் ஹோலோகிராம் உருவங்களை, 360 டிகிரி கோணத்திலும் சுழற்றிப் பார்ப்பது போன்ற கட்டுப்பாடுகளை, பக்கவாட்டில் உள்ள சிறிய திரை மூலம் செய்ய முடியும்.இவை தவிர, ஹோலோகிராம் வடிவங்களைக் கொண்ட பலவிதசெயலிகளையும், மென்பொருள்களையும் இந்தக் கணினியில் பயன்படுத்தலாம்.

SHARE