லண்டனிலுள்ள கட்டடம் ஒன்றில் பாரிய தீ விபத்து!

லண்டனிலுள்ள கட்டடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கிழக்கு லண்டனின் Barking பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில், உள்ளூர் நேரப்படி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 3.31 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த 100 தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மாலை 6 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About Thinappuyal News