இந்த வாரம் வெளியாகவுள்ள நான்கு தமிழ்த் திரைப்படங்கள்

இந்த வாரம் நான்கு தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

‘கொலையுதிர் காலம்’, ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’, ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’, ‘கேம் ஓவர்’ என நான்கு திரைப்படங்கள் இம் மாதம் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.

கனா திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 2ஆவது திரைப்படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’.

இத்திரைப்படத்தில் ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ், ஷிரின் காஞ்வாலா, சுட்டி அரவிந்த், ராதா ரவி, நாஞ்சில் சம்பத், மயில் சாமி நடிப்பில் ஸ்மைல் சேட்டை யூடியூப் புகழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார்.

‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தில் பிரதாப் போத்தன், பூமிகா போன்றோரும் நடித்துள்ளார்கள்.

விக்ராந்த் மற்றும் இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் போன்றோர் நடிப்பில் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ திரைப்படமாகும்.

இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை டாப்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கேம் ஓவர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.

 

About Thinappuyal News