விஜயின் 64ஆவது திரைப்படம்!

நடிகர் விஜயின் 64ஆவது திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விஜயின் புதிய படத்தை மாநகரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 63 திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

பெண்கள் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தின் பெயரை அவரது பிறந்தநாளையொட்டி எதிர்வரும் 21ஆம் திகதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News