இலங்கை – பங்களாதேஷ் இன்று மோதல்

உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை இலங்கை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியினை பெற்றிருந்த நிலையில், கடைசியாக இதே பிரிஸ்டோல் மைதானத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மழைகாலநிலை காரணமாக கைவிடப்பட்டது. அதேநேரம், பங்களாதேஷ் அணி தங்களுடைய 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் இன்று இலங்கை அணியை சந்திக்கவுள்ளது.

உலகக் கிண்ணத்தை பொறுத்தவரை இலங்கை அணி ஏமாற்றத்துக்குறிய ஆரம்பத்தை பெற்றிருந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இலங்கை அணியால் ஓட்டங்களை கடக்க முடியவில்லை என்பதுடன், பந்துவீச்சாளர்களால் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தடுமாறினர். எனினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும், பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி இலங்கை அணிக்கு முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்தனர்.

இதனையடுத்து நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு கடுமையான சவாலை பங்களாதேஷ் அணி கொடுத்த போதும், களத்தடுப்பில் செய்த சில தவறுகளால் தோல்வியை தழுவ நேரிட்டது. இதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் பங்களாதேஷ் அணி 300 ஓட்டங்களை நெருங்கியிருந்தது.

இவ்வாறு பலம் வாய்ந்த அணிகளுக்கு சவால்களை விடுத்துள்ள பங்களாதேஷ் அணி இன்றைய போட்டியில் இலங்கை அணிக்கு மிகச்சவாலான அணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷ் அணியின் முன்னேற்றத்துக்கு அனுபவ வீரர்கள் அதிமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். குறிப்பாக அணித் தலைவர் மஷ்ரபீ மொர்டஷா, சகிப் அல் ஹசன், மொஹமதுல்லாஹ் மற்றும் முஷ்தபிகுர் ரஹீம் ஆகியோரின் பங்களிப்பு அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

About Thinappuyal News