பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழா

மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவின் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (9) மாலை அடம்பன் ம.வி பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேச செயலகங்கள் சார்பாக விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர். விளையாட்டுக்குழுவின் தலைவர் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் கலந்து கொண்டார்.

இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளின் இறுதியில் 1 ஆம் இடத்தினை மன்னார் பிரதேச செயலகமும், 2 ஆம் இடத்தினை மாந்தை மேற்கு பிரதேச செயலகமும், 3 ஆம் இடத்தினை முசலி பிரதேச செயலகமும் பெற்றுக் கொண்டு வெற்றிக்கேடயங்களை தன் வசப்பத்திக் கொண்டனர். இதன் போது வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கேடயமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News