லொறி விபத்திற்குள்ளானதில் 7 பேர் காயம்

வவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று (11) காலை லொறியொன்று விபத்திற்குள்ளானதில்,  7 பேர் காயமடைந்துள்ள நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி எரு ஏற்றிகொண்டு பயணித்த குறித்த  லொறியானது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதோடு, குறித்த லொறியில் பயணித்த  7 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Thinappuyal News