இராவண எல்ல நீர்வீழ்ச்சி பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்து

இராவண எல்ல நீர்வீழ்ச்சி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று விபத்திற்குள்ளானதில் பெண்கள் இருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் படுகாயமடைந்துள்ளதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல – வெல்லவாய வீதி வழியாக நேற்றிரவு (10) பயணித்துக்கொண்டிருந்த குறித்த  முச்சக்கரவண்டியானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று 350 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி உட்பட 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மூவர் பண்டாரவளை வைத்தியசாலையிலும், மூவர் பதுளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில்  36, 38 வயதுடைய பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

About Thinappuyal News