37 வயதான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்றைய தினம் அறிவித்தார் இதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,  நான் நிறைய பேசவேண்டியுள்ளது. அவை அனைத்திற்கும் இதுதான் சரியான தருணம். பல சம்பவங்கள் தொடர்பாக ஆலோசிக்க வேண்டியுள்ளது. ஆனால், தற்போது நான் எதையும் பேச விரும்பவில்லை. ஏனெனில் உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்று வருகிறது. எனவே வீரர்களைச் சுற்றி எந்த சர்ச்சையையும் நான் ஏற்படுத்த விரும்பவில்லை.

உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் நல்ல மனநிலையுடன் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நான் எனது வாழ்வில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்று விரும்பினேன். ஆகையால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளேன். சரியான நேரம் வரும்போது எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நிறைய பேசவேண்டியுள்ளது என்றார்.