அந்தக் கும்பல் போலியாக உருவாக்கப்பட்ட 188,000 கிலோ கிராம் நிறையுடைய பாறைகளுக்குள் போதைப் பொருளை மறைத்து வைத்துக் கடத்தியுள்ளது.

இந்நிலையில் தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்த பாறைகளைச் சுத்தியலால் உடைத்துப் பரிசோதித்த போதை ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளைக் கொண்ட 785 பொதிகளைக் கண்டு பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொலம்பியா மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.