இலங்கை வர மறுத்த மெக்காவோ கால்பந்தாட்ட அணி

15

மெக்­காவோ அணி இலங்கை வர மறுப்புப் தெரிவித்து பிபாவிடம் அறிவித்துள்ளதால் இன்று நடைபெறவிருந்த பிபா தகுதி காண் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டி இரத்துச் செய்யப்படுவதாக இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

2022 பிபா உலகக் கிண்ணக் கால்­பந்­தாட்டத் தொட­ருக்­கான தகுதி காண் சுற்றுத் தொடரின் இரண்டாம் கட்டப் போட்­டியில் இன்று இலங்­கையும் மெக்­காவோ அணியும் கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் மோத ஏற்பாடாகியிருந்தது.

இந்­நி­லையில் மெக்­காவோ கால்­பந்­தாட்ட அணி நேற்று இரவு வரை இலங்­கைக்கு வருகை தந்­தி­ருக்கவில்லை.

அத்­தோடு மெக்­காவோ அணியும் உத்­தி­யோ­க­பூர்வமாக எவ்­வித பதிலும் தெரி­விக்­க­வில்லை என்றும் இலங்கைக் கால்­பந்­தாட்ட சம்­மே­ளனம் நேற்றுக் காலை தெரிவித்திருந்தது.

அனைத்து பாது­காப்பு தேவை­க­ளையும் பூர்த்தி செய்து போட்டி குறித்த பாது­காப்புத் திட்­டங்­க­ளுக்கு பிபா மற்றும் ஏ.எவ்.சி. ஒப்­புதல் அளித்­துள்ள நிலை­யிலும் மெக்­காவோ அணி வரத் தயங்­கு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில், குறித்த போட்­டிக்கு முன்­ன­ரான ஊடக சந்­திப்பில் நேற்றுப் பேசிய சம்­மே­ளனத் தலைவர் அநுர டி சில்வா, “இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சுக­த­தாஸ அரங்கில் போட்­டியை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் நாம் மேற்­கொண்­டுள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்­நி­லையில் நேற்று மாலை 6 மணி­ய­ளவில் இலங் கை கால்­பந்­தாட்ட சம்­மேளனம் விடுத்த அறிக்­கையில், இன்­றைய போட்டி இரத்துச் செய்­யப்­ப­டு­வ­தாக அறி­வித்­தது.

இலங்­கைக்குச் சென்று விளை­யாட முடி­யாது என்று பிபா அமைப்பிடம் மெக்­காவோ அறி­வித்­துள்­ள­தா­கவும் அதனால் போட்டி இரத்துச் செய்­யப்­ப­டு­வ­தா­கவும் அந்த அறிக்­கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE