கிழக்கு மாகாண ஆளுனரின் இனவாதச் செயற்பாடு வெட்ட வெளிச்சமானது என்பதை அவரே ஒத்துக் கொண்டிருக்கின்றார்.

26

 

முஸ்லிம் அமைச்சர்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால் ஏப்ரல் 22 ஆம் திகதி பதவி விலகியிருக்க வேண்டும்” – வியாழேந்திரன்


:
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களை பதவி நீக்க யாரும் என்னிடம் சொல்லி நாம் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதில்லை. தாமாகவே உணர்ந்துதான் அந்தப் போராட்டத்தை மேற்கொண்டேன்.”
.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“2015ம் ஆண்டிலிருந்து இன்றுவரையில் மட்டக்களப்பில் அதிகளவு மக்கள் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் அது நான்தான். அதே ஆளுனரின் செயற்பாட்டை புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக நான் எதிர்த்தேன்.
.
கிழக்கு மாகாண ஆளுனரின் இனவாதச் செயற்பாடு வெட்ட வெளிச்சமானது என்பதை அவரே ஒத்துக் கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்டவரை பதவி நீக்க யாரும் என்னிடம் சொல்லி நாம் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதில்லை. தாமாகவே உணர்ந்துதான் அந்தப் போராட்டத்தை மேற்கொண்டேன்.
.
கடந்த காலத்தில் சில கட்டுப்பாடுகள் எமக்கிருந்தன. தற்போது அந்தக் கட்டுப்பாடுகள் இல்லை. குறிப்பாக மகிந்த ராஜபக்ச சொல்லி உண்ணாவிரதம் இருந்தீர்களா என்றும் என்னிடம் சிலர் கேட்கின்றனர்.
.
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச கையொப்பம் இடவில்லை, நான் அதில் 12ஆவது நபராக கையொப்பம் இட்டேன். என்னைத் தெரிவு செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்குச் சார்பாக செயற்படுகின்றேன்.
.
அதனால் நான் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அப்பாவி முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாக நான் சொல்லி வருகின்றேன்.
.
முஸ்லிம் மக்களின் நலன் பற்றி முஸ்லிம் அரசியல் வாதிகளும், தமிழ் அரசியல் வாதிகளும் பேசினால் அவர்கள் நல்லவர்களாகவும், தமிழ் மக்களின் நலன் சார்ந்து தமிழ் அரசியல்வாதிகளாகிய நாங்கள் பேசினால் எம்மை இனவாதியாகவும் பார்க்கின்றார்கள். இதில் என்ன நியாயம் இருக்கின்றது?
.
“எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தமிழருடைய காளிகோயிலை தகர்த்து அங்கே மீன் சந்தை கட்டினேன், நீதிபதியை மாற்றினேன்,” என தெரிவித்துள்ளார். இதனை எந்த அரசியல்வாதியும் எதிர்த்துப் பேசவில்லை,
.
தற்போது குற்றம்சாட்டப்பட்டிருப்பது ஒரு அமைச்சர் மீதும், இரண்டு ஆளுனர்கள் மீதும்தான். ஆனால் தற்போது அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்திருக்கின்றார்கள். இதனை தமது சமூகத்திற்காகச் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
.
அவ்வாறு சமூகத்திற்காக செய்வதாயின் ஏப்ரல் 22ஆம் திகதி செய்திருக்க வேண்டும். ஏப்ரல் 21நடந்த சம்பவத்தால், தமிழ்ச் சமூகத்திற்கே பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
.
நேர்மையானவர்களாக இருந்தால் எமக்கு இந்த அமைச்சு வேண்டாம் என அன்றே அவர்கள் பதவி விலகியிருக்க வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE