ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் – பஷில் ராஜபக்ஷ

மாகாணசபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் எவ்வித  முன்னேற்றகரமான ஏற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் பொதுஜன பெரமுனவின் சார்பிலே ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் நாங்கள் அமோக வெற்றிப் பெறுவோம் என்பதில்  சந்தேகமில்லை.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும்  என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். எனவே மக்களின் கருத்திற்கு மதிப்பளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சி செயாளர்களுக்கும் , கட்சியின்  முக்கிய  உறுப்பினர்களுக்கும் தேர்தல் ஆணைக்குவின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று தேர்தல் ஆணையகத்தில் இடம் பெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

About Thinappuyal News