ஹேரொயினுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

16

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூன்று கிராம் ஹேரொயின் போதைப்  பொருளை வைத்திருந்த வியாபாரியொருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று(12)  உத்தரவிட்டார்.

இரண்டாம் வட்டாரம்,வீரஞ்சோலை,குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீண்ட காலமாக குச்சவெளி பகுதியில் ஹேரொயின்  விற்பனை செய்து வருவதாக குச்சவெளி போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டினை சோதனையிட்ட போதே மூன்று கிராம் ஹேரொயினுடன் கைது செய்ததாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

SHARE