கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் – மக்கள் விடுதலை முன்னனி

21

நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்திருந்தும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்ட அரசாங்கம் தொடர்ந்து  பதவியில் இருப்பது ஜனநாயகத்திற்கு பொறுத்தமற்றது எனத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னனி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது.

கொழும்பு டெக்னிகல் சந்தியில் மாலை 3 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பேரணியாக கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற அரசாங்கத்திற்கெதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான பிமல் ரத்னாயக்க, விஜித ஹேரத், சுனில் அந்துனெத்தி, ஜயந்த ஜயதிஸ்ஸ மற்றும் லால் காந்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சுமார் 500 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக மருதானை மற்றும் புறக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணித்தியாலயம் கடும் வாகன நெரிசல் காணப்பட்டது.

புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு பேரணி நிறைவடைந்ததோடு, கட்சி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களின் உரையுடன் போராட்டம் நிறைவடைந்தது.

SHARE