பும்ராவுடன் காதலா? விளக்கம் அளித்த – அனுபமா

பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார். தமிழ், மலையாளத்தில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
அனுபமா பரமேஸ்வரனும், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய வீரர் பும்ராவும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. டுவிட்டரில் பும்ரா பின்தொடரும் ஒரே நடிகை அனுபமாதான். பும்ராவின் டுவிட்டுகளை ஒன்று விடாமல் அனுபமா ரீட்வீட் செய்கிறார். பதிலுக்கு பும்ராவும் அனுபமா பரமேஸ்வரனின் டுவிட்டுகளை லைக் செய்கிறார்.
இதை பார்த்து தான் அவர்களுக்கு இடையே காதல் என்று பேச்சு கிளம்பியது. இது குறித்து அனுபமாவிடம் கேட்டபோது அவர், ‘எனக்கும், பும்ராவுக்கும் காதல் எல்லாம் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே…’ என்று தெரிவித்துள்ளார்.

About Thinappuyal News