அத்தகைய செய்திகளை பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது – கியாரா அத்வானி

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமானவர் கியாரா அத்வானி. விரைவில் இவரது நடிப்பில் அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் படம் ரிலீஸாக உள்ளது.

கியாரா அத்வானி படங்களில் படுபிசியாக உள்ளார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அவரும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக இருந்தது. அவர்களின் காதலுக்கு பின்னால் பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கியாரா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

நானும், சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலிப்பதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. சும்மா கிளப்பிவிட்டுள்ளார்கள். முன்பெல்லாம் நான் யாரையாவது காதலிக்கிறேன் என்று செய்தி வெளியானால் கவலைப்படுவேன். ஆனால் தற்போது அத்தகைய செய்திகளை பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது என்று தெரிவித்துள்ளார் கியாரா அத்வானி.

விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க உள்ள படத்தில் கியாரா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News