நாட்டு மக்களின் மத்தியில் நல்லிணக்கமும், சாந்தியும் சமாதானமும்   உருவாக வேண்டும்

7

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னர்  கிறிஸ்தவ மக்கள் எத்தகைய வன்முறை செயல்களிலும் ஈடுபடவில்லை. தொடர்ந்தும் முஸ்லிம் மக்களை பாதுகாத்தே வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், நாட்டை மீண்டும் இரத்த பூமியாக்க  இடமளிக்க முடியாது. ஆகவே இத்தகையதொரு நிலையில், நாட்டு மக்களின் மத்தியில் நல்லிணக்கமும், சாந்தியும் சமாதானமும்   உருவாக வேண்டும் என  கொழும்பு மறைமாவட்ட பேராயர்   கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலை தொடர்ந்து கொழும்பு  -கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் புனர்நிர்மாணம்  செய்யப்பட்டபின்னர் 185 ஆவது வருடாந்த திருநாள்  திருப்பலி இந்த தடவை கொடியேற்றம், திருச்சொரூபப்பவனி என்பன இடம்பெறாமல் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில்  இடம்பெற்றது.

புனர்நிர்மாணம் செய்யப்பட்டுபு நேற்று திறந்து  வைக்கப்பட்ட நிலையிலேயே வருடாந்த திருநாள் திருப்பலி நேற்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன் போது  தமது உறவுகளை இழந்த, காயங்களுக்குள்ளான  நூற்றுக்கணக்கான பக்கர்கள் மற்றும் குருக்கள், அருட்சகோதரிகள்,  அரசியல் தலைவர்கள்,  வெளியாட்டு தூதவர்கள், கடற்படை தளபதி   உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டிருந்துடன், பக்தர்கள்  உயிரிழந்த  மற்றும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் தமது   உறவுகளுக்காக கண்ணீர்மல்க பிராத்தனைகளில்  ஈடுபட்டனர்.

மன்னார் மறைமாவட்ட  பேராயர்  இம்மானுவேல்   உள்ளிட்ட  பேராயர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்ட கூட்டுத்திருப்பலியின் போது உரையாற்றுகையிலேயே மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு கூறினார்.

SHARE