மழை காரணமாக கைவிடப்பட்ட உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி

9

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது போட்டி நேற்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே ஆரம்பமாகவிருந்தது.

எனினும் தொடர்ச்சியாக அங்கு பெய்து வந்த மழை காரணமாக போட்டி நாணய சுழற்சிகூட மேற்கொள்ளப்படாது இலங்கை நேரப்படி 7.30 மணியளவில் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வழங்கப்பட்டது.

நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட நான்காவது போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE