புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் ஹொனர்

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஹுவாவி நிறுவனத்தின் உப நிறுவனமான ஹொனர் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதம் 21 ஆம் திகதி இக் கைப்பேசி ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் ஜுன் 20 ஆம் திகதி வரை முன் பதிவு செய்ய முடியும்.

இதில் 48 மெகாபிக்சல்களை உடையதும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான குவாட் கமெரா உள்ளடக்கப்பட்டுள்ளது.

தவிர Virtual 9.1 Surround Sound, 3750 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் செல்ஃபி கமெராவானது 16 மெகாபிக்சல்களை கொண்டுள்ளதுடன், பரந்த தேசத்தை படம் பிடிக்கக்கூடியதாகவும் உள்ளது.

இக் கைப்பேசியின் விலையானது 399 யூரோக்கள் ஆக காணப்படுகின்றது.

About Thinappuyal News