விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அமலா பால்

நடிகை அமலா பால் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் நான்கைந்து படங்கள் கைவசம் வைத்துள்ளார். அவர் நடித்துள்ள ஆடை படத்திற்கு ஏ சென்சார் சான்ற்தழ் கொடுக்கப்பட்டது பரபரப்பாக சமீபத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் அவர் கமிட் ஆகியுள்ளார். இதில் தான் அவர் முதல் முறையாக அவருடன் ஜோடி சேர்கிறார்.

இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் உதவியாளராக இருந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்த படத்தினை இயக்குகிறார். படத்தில் அமலா பால் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இசை கலைஞர்களாக நடிக்கவுள்ளனர்.

சென்னையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு ஊட்டி செல்லவுள்ளது.

About Thinappuyal News