பெண்ணைப் போல் நட­மா­டிய ஆண் கைது

தல­வாக்­கலை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பெவன்  தோட்­டத்தில் நேற்று முன்­தினம் இரவு 11 மணி­ய­ளவில் பெண்ணைப் போல் இரவு ஆடை­களை அணிந்து கொண்டு நட­மா­டிய ஆண் ஒரு­வரை தல­வாக்­கலை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

குறித்த பிர­தே­சத்­தி­லுள்ள குடி­யி­ருப்­பு­களின் பின்­பு­ற­மாக நட­மாடும் சத்­தத்தைக் கேட்ட பிர­தேச மக்கள் அச்­ச­ம­டைந்­த­தோடு தல­வாக்­கலை பொலி­ஸா­ருக்கு தக­வலை வழங்­கினர். அத­னை­ய­டுத்து குறித்த நபர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கைது செய்­யப்­பட்ட நபர் தல­வாக்­கலை பிர­தே­சத்தைச் சேர்ந்­தவர் எனத் தெரிய வந்­துள்­ளது. மேலும் அந்­நபர் இரவு நேரத்தில் மாறு­ வே­டத்தில் நட­மா­டி­ய­மைக்­கான காரணம் தொடர்பில் விசாரணைகளை தலவாக்கலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

About Thinappuyal News