Protesters react to a tear gas during a demonstration against a proposed extradition bill in Hong Kong, China June 12, 2019. REUTERS/Tyrone Siu

ஹொங்­கொங்கில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கும் பொலிஸா­ருக்­கு­மி­டையில் மோதல்

சீனாவின் பிர­தான நிலப் பகு­திக்கு சந்­தே­க­ந­பர்­களை விசாரணைக்காக அனுப்­பு­வ­தற்­கான திட்­டத்­திற்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஹொங்­கொங்கில்  நேற்று இடம்­பெற்ற  ஆர்ப்பாட்டங்­களின்போது  ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கும் பொலிஸா­ருக்­கு­மி­டையில் மோதல் இடம்­பெற்­றுள்­ளது.

பெருந்­தொ­கை­யான மக்கள் அந்­ந­க­ரி­லுள்ள சட்­ட­சபைக் கட்டிடத்தை  சூழ்ந்­தி­ருந்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­தாக அங்கிருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில் அந்தப் பிராந்­தி­யத்தில் பொலிஸ் வேன்கள் நீண்ட வரி­சையில் நிறுத்­தப்­பட்டு பெருந்­தொ­கை­யான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

இதன்­போது  ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் சிலர்  பொலி­ஸாரின் கண்ணீர்ப் புகைப் பிர­யோ­கத்தை எதிர்­கொள்ளத் தயா­ராக முக­மூடி அணிந்து காணப்­பட்­டனர்.

மேற்­படி ஆர்ப்­பாட்டம் காரணமாக அந்தப் பிராந்தியத்திலுள்ள அரசாங்கக் கட்டிடங்கள் பலவும் நேற்று வியாழக்கிழமை மூடப்பட்டிருந்தன.

About Thinappuyal News