பாக்கிஸ்தானால் இந்தியாவை நிச்சயம் தோற்கடிக்க முடியும் – முகமட் அமீர்

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள  போட்டியில் பாக்கிஸ்தானால் இந்தியாவை நிச்சயம் தோற்கடிக்க முடியும் என பாக்கிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமட் அமீர் தெரிவித்துள்ளார்.

உலககிண்ண தொடரில் அனைத்து போட்டிகளும் அழுத்தங்கள் நிறைந்தவை என தெரிவித்துள்ள முகமட் அமீர் இது இந்தியாவிற்கும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் நாங்கள் சாதகமான மனோநிலையுடன் விளையாடவேண்டும் என தெரிவித்துள்ள முகமட் அமீர் நாங்கள் அனைத்துப்போட்டிகளிலும் வெல்லவேண்டிய நிலையில் உள்ளோம் எங்களால் முடிந்தளவிற்கு நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

எங்களால் நிச்சயமாக இந்தியாவை தோற்கடிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ள முகமட் அமீர் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் எங்கள் அணியின் இறுதிதுடுப்பாட்டவீரர் வரை போராடினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

About Thinappuyal News