சீனாவில் கனமழையில் சிக்கி 61 பேர் பலி

சீனாவில் பெய்து வரும் கனமழையால் பாரிய நிலச்சரிவுகளும்,வெள்ளப்பெருக்குமாக காணப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி இதுவரை 61 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் வடக்கு சீனா பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கடும் க்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

கடும் மழையினால் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் இறுப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் , 61 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News