வாக்குவாதத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகிய 33 வயது நபர்

17

திருகோணமலை – அனுராதபுரம் சந்தி பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி  திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்றிரவு (13) அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை-கப்பல் துறை பகுதியைச் சேர்ந்த 33 வயதான சண்முகம் சதீஷ்குமார் இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுர சந்தி மதுபான கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒருவர் மற்றவரை கத்தியால் குத்தியதாகவும் இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தை காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தியால் குத்தியதாக கூறப்படும் சந்தேகநபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தி குத்துக்கு இலக்கானவர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE