டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சவுதாம்டனில் இன்று நடைபெறும் 19-வது லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இரு அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:-
இங்கிலாந்து: ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், ஜோஸ் பட்லர், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித் , மார்க்வுட்.
வெஸ்ட்இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், இவின் லுயிஸ், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வெய்ட், ஷினான் கேப்ரியல், ஆந்த்ரே ரஸ்செல், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ்.

About Thinappuyal News