அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த மேற்கிந்தியத்தீவுகள்

5

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் 212 ஓட்டத்துக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 19 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கிறிஸ் கெய்ல் 36 ஓட்டத்துடனும், லிவிஸ் 2 ஓட்டத்துடனும், ஷெய் ஹோப் 11 ஓட்டத்துடனும், நிகோலஸ் பூரன் 63 ஓட்டத்துடனும், சிம்ரமன் ஹெட்மேயர் 39 ஓட்டத்துடனும், ஹோல்டர் 9 ஓட்டத்துடனும், ரஸல் 21 ஓட்டத்துடனும், ஷெல்டன் காட்ரல் டக்கவுட்டுடனும், பிரத்வெய்ட் 14 ஓட்டத்துடனும், கப்ரியல் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜோப்ர ஆச்சர், மார்க்வூட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ரூட்  2 விக்கெட்டுக்களையும், கிறிஸ் வோக்ஸ், பிளாங்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

SHARE