லிபியா உள்நாட்டு போர் மோதலில் 42 பேர் பலி

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 42 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதோடு, 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.

லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, கடந்த 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டதிலிருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசுப் படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். குறித்த தாக்குதலில்  சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 42 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதோடு, 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.

About Thinappuyal News