சைனீஸ் ஸ்டைலில் தக்காளி முட்டை சாதம் செய்வது எப்படி

1
சைனீஸ் ஸ்டைல் தக்காளி முட்டை சாதம்

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 1 கப்
தக்காளி – 1
தக்காளி கெட்சப் – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயத்தாள் – சிறிதளவு
முட்டை – 3 (வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டது)
பூண்டு – 10 பல்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

பாசுமதி அரிசியை முக்கால் பாகம் உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தாள், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முட்டையை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்னர் வெங்காயத்தாள், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து வேக வைத்த சாதம், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

பிறகு சிறிது நேரம் கழித்து, அதில் தக்காளி கெட்சப், உப்பு, சோயா சோஸ், வினிகர் மற்றும் மிளகு தூள் போட்டு, கிளறி விட வேண்டும்.

பின் முட்டைத் துண்டுகளை சேர்த்து பிரட்ட வேண்டும்.

பின் அந்த சாதத்தை நன்கு 5 நிமிடம் கிளறி, கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.

இப்போது சுவையான தக்காளி முட்டை சாதம் ரெடி!!!