சிங்களம் என்கின்ற மொழியில் பௌத்தம் போதிக்கப்பட்டதுக்கும் பேசப்பட்டதுக்கும் எந்த வகையான ஆதாரமும் இல்லை.

2

 

இலங்கை என்னும் தீவை பொறுத்தவரை சிங்களம் என்பது முக்கிய ஒரு சொல்லாகவும் சிங்களவர்கள்ஆட்சி உரிமையாளர்களையும் மாறி போய் விட்டார்கள்.

இலங்கையில் சிங்களம் தன்னோடு இறுகப்பினைத்து கொண்டு இருகின்ற விடயம் பௌத்தம்.உண்மையில் அந்த பௌத்தம் என்பது தான் சிங்களம் என்னும் மொழியின் மிக பெரிய பலமே.

சிங்கள மொழி
சிங்கள மொழி

எப்போது சிங்களவர்களின் கைக்கு இலங்கை தீவின் ஆட்சி அதிகாரம் கைமாறியது என்பதை விடுத்து இந்த பதிவு சிங்களம் என்ற மொழி எப்போது  உருவானது ? அது எவ்வளவு பழமையானது என்று பாப்போம் ? பல கேள்விகளுக்கு இந்த அலசல் ஒரு பகிரங்க பதிலை தரும்.

 

 

 

 

தாம் லால தேசத்தில் (இன்றைய குஜராத் பகுதி)ருந்து வந்த விஜயனின் அருவடிகள் என்று இலங்கை சிங்கள பௌத்தர்கள் தாமே ஏற்று கொள்கின்றனர்.

விஜயன் வருகை
விஜயன் வருகை

இங்கே விஜயன் பேசிய மொழி என்ன ? இங்கு வந்து குவேனியிடம் இருந்து ஒரு பகுதியின் ஆட்சி அதிகாரத்தை பெற்று கொண்ட விஜயன் பாண்டிய மன்னனின் மகளையும், ஒரு யக்ஷர் குலப் பெண்ணையும் மணந்து இருக்கின்றான்.ஆதலால் இந்த தொடர்புகள் இவன்   பாண்டிய வம்சம் ,யசூர் வம்சம் ஆகியவற்றுக்கும் பரிட்சயமானஉ மொழியை தான் ஊடகமாக கொண்டு  இருக்க வேண்டும் . அது தமிழ் அல்லாமல் பிராமி வடிவங்களாக இருந்து இருக்கலாம்.கண்டிப்பாக இன்றையை சிங்களமோ,சிங்களத்தின் முன் வடிவமோ இல்லை.இது போக விஜயன் வருகையின் போது எலு என்னும் மொழியும் இலங்கையில் பரவி இருந்தது.(எலு – தமிழ் பிராமி எழுத்து  வடிவின் ஒலியமைப்பு கொண்ட  பேச்சு வழக்கு மொழி.)

மொழிக் குடும்பம்

இன்று சிங்களத்தை சில ஆய்வாளர்கள் இந்தோ- ஆரியன் குடும்பத்துக்குள் உள்ளடக்குகின்றனர்.சிங்களம், ஏனைய இந்தோ-ஆரிய மொழிகளில் காணப்படாத சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது தென்னாசியப் பிரதேசத்தைச் சேர்ந்த திராவிடம், அவுஸ்திரோனீசியன் போன்ற ஏனைய மொழிக்குடும்பங்களின் தாக்கத்தால் உண்டானது. தமிழ் மொழி, சிங்கள மொழியின் அமைப்பிலும், சொற் தொகுதியிலும் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கியதன் காரணமாகச் சில அறிஞர்கள் சிங்கள மொழி ஒரு திராவிட மொழி என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.ஆனால் இலக்கண அடிப்பட்டையில் இந்து-ஆரிய பண்புகளை சிங்களம் எதிர்த்து நிற்கின்றது.குறில் வர்ற வேண்டிய இடத்தில் நெடிலும் ,நெடில் நிற்க வேண்டிய இடத்தில் குறுகி ஒலித்தும் முரண்படுகின்றது.இது போக சில சொற்கள் சம்பந்தமல்லாமல் இருகின்றன.

ஜெர்மானிய மொழி சொற்களுடன் சில சொற்கள் ஒத்துபோகின்றன.இதன் காரணமாயும் வேறு சில ஒலி அடிப்படையிலும் இந்தோ-ஐரோபிய மொழி குடும்பத்தை சிங்களம் சார்ந்தது என்று சில ஆய்வாளர்கள் வரையறை செய்கின்றனர்.

ஆனாலும் சில புதிர்கள் இருகின்றன.உடல் உறுப்புகளை குறிக்கும் சொற்கள் (ஒலுவ – தலை ,கழுத்து -பெல்லா,கால் – ககுல, தொடை -களுவ)  போன்ற சொற்கள் வேறு எந்த மொழியிலும் இருந்து வந்ததற்கான சான்றுகள் இல்லை.

இது மட்டுமல்ல பௌத்தம் இலங்கையில் தமிழ் மொழி மூலமாகவே ஆரம்பமானது

பௌத்தமும் மொழியும்

இலங்கையை பொறுத்தவரை அதுவும் தற்காலத்தை பொறுத்த வரை மாத்திரம் தான் பௌத்தம் என்பது சிங்களத்தையும் சேர்த்து குறித்து நிற்கின்றது.வேறு பல நாடுகளில் பௌத்தத்தின் வரலாறு உண்டு.ஆனால் சிங்களத்தின் வரலாறு இலங்கையில் மாத்திரமே உண்டு.இந்த சிறு பான்மை உணர்வுதான் பௌத்தம் என்பதை தம்முடம் பற்றி கொண்டு தமக்கே என ஒரு ஆதிக்க தேசத்தை உருவாக்க சிங்களவர்களை தூண்டியது.

பௌத்தத்தின் ஆரம்பம் எங்கு பார்த்தோமானால் அது அன்றைய அகன்ற பாரதத்தின் வட பகுதி,இன்றைய இந்திய நேபாள எல்லை பகுதி.(நேபாளம் அன்று முதல் இன்று வரை இந்து மத ஆதிக்க பகுதி என்பதை நினைவில் கொள்க).

இந்து மத வேதவேள்விக் கலாச்சாரத்திற்கு எதிராக வேதத்திற்கு உள்ளிருந்தே எழுந்த முதற் போராட்டத்தின் வெளிப்பாடே உபநிடதச் சிந்தனை என்று கருதப்படுகின்றது. உபநிடதச் சிந்தனை ஞானம், தியானம், முக்தி, ஒடுக்கம் போன்ற சமுதாய நெறிகளை முதன்மைப்படுத்தின.

அடிமைச் சமூகத்திலிருந்து நிலப்பிரபுத்துவத்திற்கு சமூகத்தை நகர்த்துவதில் உபநிடதங்கள் அதிகாரவர்க்கத்திற்குத் துணை சென்றன.இரும்பு உபயோகத்திற்கு வந்ததிலிருந்து உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட ஆரம்ப மாற்றத்திலிருந்து உருவான சமூகப் பகைப்புலமே இந்த சித்தாந்த மாற்றத்தை வேகமாக நகர்த்தியது.

இக்கால கட்டத்தின்போதே சமணம், பௌத்தம், போன்ற வேத நிலையிலிருந்து வேறுபட்ட தத்துவங்கள் உருவாகின. கி.மு.7ம் நூற்றாண்டிலிருந்து உருவாகத்தொடங்கிய இந்தச் சமூக அமைப்பிலான மாற்றம் பல ஆண்டுகள் வரையில் தொடர்ந்தன.அதிகார சக்திகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. மரணமும் பீதியும் வறுமையும் மேலோங்கியிருந்த இந்தக் காலகட்டம் எல்லாச் சமூக மாற்றங்களினதும் ஆரம்ப கட்டத்தினைப் போலவே துன்பியல் நிறைந்திருந்ததாகக் காணப்பட்டது.

இவற்றுக்கெதிரான போராட்டங்களினதும் நிலப்பிரபுத்துவக் காலகட்ட எழுச்சியின் ஆரம்பத்தினதும் நிறுவன மயமாக்கல்தான் உபநிடதத்தின் தோற்றமும், இதே போல பௌத்தத்தின் தோற்றமுமாகும்.

இவ்வாறு வட பகுதியில் உருவான பௌத்தம் மெல்ல மெல்ல தென்னிந்தியா,இலங்கை என பரவியது.அதே வேளைசீனா,ஜப்பான் பகுதிகளுக்கு பரவியது.

பௌத்தம் தன்னை பரப்ப எடுத்து கொண்ட மௌனமான ஆயுதம் அமைதி,சாந்தம்,சமாதானம்.ஆனால் இலங்கை வந்து சேர்ந்த பௌத்தம் யுத்த வெறி வரை வளர்ந்து பல கோரத்தாண்டவங்களை ஆடியது.

தென்னிந்தியாவை பொறுத்தவரை பௌத்தம் பிரபல்யம் அடைந்த காலப்பகுதி கி.பி 3 ஆம் நூற்றாண்டு..

ஆக மொத்தம் இலக்கைக்கு பௌத்த ஆதிக்கம் வலுத்த  கி.பி 3 அல்லது அதன் பின்னர் தான்   சிங்களம்  உருவாவதற்கான அடித்தளமும்  உருவானது.

தேரவாத பௌத்தமும் மகாயான பௌத்தமும்

பௌத்த மதம் தன்னை விஸ்தரிப்பதிலும் தன்னை காத்து கொள்வதிலும் ஒரு பிரச்சனை இருந்தது.பாரம்பரிய சடங்குகளையும் கோவில் போன்ற கட்டமைப்புகளையும் புறக்கணத்தமையாலும் மக்களிடம் இந்தியாவில் நிலைக்க முடியாமல் தடுமாறியது.இந்த தடுமாற்றம் பௌத்தத்தில் இரு பிரிவுகளை உருவாக்கியது.

இந்த பிளவின் போது ஒரு பகுதியினர் மகாயான பௌத்தம் ஆகவும்,பழைய சம்பிரதாய வழிகளை தமக்குள்ள ஏற்று கொண்டவர்கள் தேரவாத பௌத்தர்கள் ஆகவும் பிரிந்து கொண்டனர்.

இலங்கையில் இந்த பிளவு வேறு வகையில் எதிரொலித்தது.தமிழ் மூல பௌத்தம் ,பாளி மூல பௌத்தம்.

கி மு 221 – 207 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இரண்டு முக்கிய இடங்கள் பௌத்தத்தினை போதித்தன.

மகா விகாரை – அனுராபுரம்

இங்கு பாளி மொழியில் தேரவாத பௌத்தம்கற்பிக்கப்பட்டது.

போதி மரம் - அனுராதபுரம் மகா விகாரை
போதி மரம் – அனுராதபுரம் மகா விகாரை

 

புத்தகாய - கௌதம புத்தர் ஞானம் பெற்ற மரம்
புத்தகாய – கௌதம புத்தர் ஞானம் பெற்ற மரம்

அபயகிரி விகாரை  – அனுராதபுரம்

தமிழ் மொழியில் மகாயான பௌத்தமும் போதிக்கப்பட்டது.

இக்கால பகுதியில் கூட சிங்களம் என்கின்ற மொழியில் பௌத்தம் போதிக்கப்பட்டதுக்கும் பேசப்பட்டதுக்கும் எந்த வகையான ஆதாரமும் இல்லை.

தமிழ் கல்வெட்டு - அபயகிரி விகாரை
தமிழ் கல்வெட்டு – அபயகிரி விகாரை

தமிழ் மொழியில், வேத தத்துவ பரவலூடான சமஸ்கிருத கலப்பிலிருந்து, கன்னடம், துளு முதலிய மொழிகள் உருவானது போன்று பாளி மொழியின் நேரடிக் கலப்பால் உருவானதுதான் சிங்கள மொழி என்பதற்கு சிங்கள மொழியின் இலக்கண அமைப்புமுறை திராவிட மொழிகளை ஒத்திருப்பது இன்னொரு காரணம் என மொழியியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

அபய கிரி விகாரை
அபய கிரி விகாரை

பல சிங்கள பௌத்த ஆட்சியாளர்களால் அபய கிரி விகாரை கைவிடப்பட்டு இருகின்றது.

அபய கிரி விகாரை கை விடப்பட்டு இருந்த நிலை
அபய கிரி விகாரை கை விடப்பட்டு இருந்த நிலை

இலங்கையின் அரச அதிகார மோதல்களை எடுத்து பார்த்தால்

மூத்த சிவன்,எல்லாளன்,துட்டகைமுனு காலப்பகுதி வரை இராட்சியங்களை மையப்படுத்தி தான் யுத்தங்கள் நடைபெற்றன.

குறிப்பாக எல்லாளன் துட்ட கைமுனு யுத்தம் தான் மத ரீதியாக இடம் பெற்றது.அதுவும் பௌத்ததிட்க்கும் பௌத்தம் அல்லாத பகுதியினருக்கும் இடையே இடம் பெற்ற அதிகார போட்டியாகவே அது இருந்தது ஒழிய தமிழ் சிங்கள யுத்தமாக இருக்க வில்லை.

காரணம் கி .பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் சிங்களம் பேசப்பட்டதுக்கும் எழுதப்பட்டதுக்கும் ஆனா ஆதரங்கள் உண்டு.

உறுதியாக சொன்னால் கி பி 12 க்கு பின்னர் தான் சிங்களம் தமிழ் என முறுகல்கள் ஏற்பட்டு இருகின்றன.

எல்லாளன் துட்டகைமுனு யுத்தம்
எல்லாளன் துட்டகைமுனு யுத்தம்

தமிழ் பகுதியாக இருந்த அனுராத புரம்

Robert Knox
Robert Knox

17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்டி அரசனால் சிறைப்பிடிக்கப்பட்ட Robert Knox என்ற ஆங்கிலேயர், அங்கிருந்து தப்பி வடக்கு நோக்கிச்சென்றபோது அனுராதபுரத்தை அடைந்தார். பின்னர் 1681இல Historical Relation of the Island of Ceylon என்ற நூலை அவர் வெளியிட்டார். இந்த நூலில், அனுராதபுரத்தை அடைந்த Robert Knox அந்த மக்களுக்குச் சிங்களம்  புரியவில்லை என்றும், அவர்கள் தலைவனிடம் தான் கூட்டிச்செல்லப்பட்டபோது, அவனுடன் உரையாடுவதற்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவி தேவைப்பட்டது என்றும் அங்கிருந்தவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் எழுதியிருந்தார். இலங்கையில் பௌத்த மதத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் அனுராதபுரத்திலேயே சிங்களமொழி பரந்தளவில் பேசப்படாது இருந்திருக்குமானால், இந்த மொழியின் பரந்துபட்ட வளர்ச்சி என்பது மிகவும் அண்மைக் காலத்துக்குரியது என்று புலனாகின்றது.

 

இதே நேரம் இலங்கையின் வட கிழக்கில் தமிழ் மூலமான பௌத்தம் கொஞ்சம் தன் பரம்பலை பரப்பியது.தமிழ் பௌத்த விகாரைகளும் பள்ளிகளும் இயங்கின.இன்று சிங்கள பௌத்தம் வட கிழக்கில் உரிமை கோரும் எச்சங்கள் கூட தமிழ் பௌத்தத்தின் சொத்துக்களே அன்றி சிங்கள பௌத்தமாகிய மகாயான பௌத்ததிற்கு உரித்தானவை அல்ல.

 

ஆக மொத்தம் இலங்கையில் பௌத்தம் என்பது சிங்கள இனத்தால் கொண்டு வரப்படவில்லை.இந்தியாவில் இருந்து வந்து இங்கு வாழந்த விஜயன் சந்ததியும் ,இங்கு வாழ்ந்த தமிழர்களும் தமிழ் மொழியை பேசி கொண்டு தமிழ் மூலமாக பௌத்தத்தினை ஏற்று கொண்டனர்.

சிங்கள பெயர் விளக்கம்

இலங்கை கறுவா விளையும் நாடாகையால், கறுவாவின் சமஸ்கிருதப் பெயரான சிங்கலெ என்பதே சிங்களமாக மருவியிருப்பதாகப் பொதுவாகப் பல நவீன வரலாற்றாசிரியர்கள் ஒத்துக்கொள்ளும்போது, சிறீ லங்கா பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்து அரச ஆய்வாளர்கள்வரை மகாவம்சத்தின் மாயாவிக் கதைகளை ஆதாரம்காட்டி, சிங்கத்தின் வம்சாவளியினரே சிங்களவர் எனக் குறிப்பிடும் அளவிற்கு இந்த அடிப்படைவாதம் மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஆட்சி அதிகாரம் இழந்த பிரிவினர்,மற்று ஆட்சி அதிகாரம் செய்பவர்கள் உடன் இருந்த சில குழுவினராலும் பாளி மூல பௌத்தம் கடை பிடிக்க பட பின்னர் தமக்கென கி பி 6 இன் பின்னர் பாளி,தமிழ் மற்றும் கிரந்த எழுத்துக்களின் மூலம் தமக்கென சிங்களம் என்னும் மொழியை ஏற்படுத்தி கொண்டனர்.