போதைக்கு அடிமையான 18 வயதுக்குட்பட்டோரை பராமரிக்க விசேட திட்டம்

2

போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பொலிசார் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்த ஆராய்ச்சி அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.இவ்வறிக்கையில் 18வயதிற்கு குறைந்த சுமார் 6,100சிறுவர்கள் ஹெரோயின் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் அளவிலானோர் ஹெரோயின் போதைப்பொருளை தேடி அலைவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 1,500பெண்களும் 85,000 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.  மேலும் மூன்று இலட்சம் வரையானோர் கஞ்சா பயன் படுத்துவதாகவும் அதில் 1,500 பேர் பெண்களென வும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் போதைப் பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட அதிரடி தேடல்களில்  சந்தேகத்தின் பேரில் 40,846பேர் கடந்த ஆறு மாத காலத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3,500கிலோ சட்டவிரோத போதைப்பொருட்களும் கைப்பற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஹெரோயின் 1,029 கிலோவுடன் 20,309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.