வருங்கால மக்கள் தொகையைக் கணித்த ஐ.நா

2

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் பெற்றோர் 2 குழந்தைகள் பெறுவதாலும், நைஜீரியாவில் பெண்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதாலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை

மக்கள் தொகை

ஜூலை 11, ஆண்டுதோறும் இந்த நாள் சர்வதேச மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த நாளை அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபை.

மக்கள் தொகை

மக்கள் தொகை

இன்று, இந்த ஆண்டுக்கான மக்கள் தொகை தினம் என்பதால் உலக நாடுகளில் மக்கள் தொகை தொடர்பாக புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது ஐ.நா. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி உலகளவில் இந்தியாவும், நைஜீரியாவும் மக்கள் தொகையில் வேகமாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த முப்பது ஆண்டுகளில் இந்த இரண்டு நாட்டில்தான் அதிக மக்கள் தொகை இருக்கும். 2050-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 273 மில்லியனாகவும், நைஜீரியா மக்கள் தொகை 200 மில்லியனாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 2027-ம் ஆண்டில், மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ள சீனாவை வீழ்த்தி இந்தியா முன்னிலைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தில் தற்போது 7 பில்லியனாக உள்ள மக்கள் தொகை 2050-ம் ஆண்டில் 2 பில்லியன் அதிகரித்து 9 பில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா

ஐ.நா

‘இந்தியா, கரீபியன் போன்ற நாடுகளில்தான் பருவ வயதுடைய இளைஞர்கள் அதிகம் உள்ளனர். எனவே இந்த நாடுகளின் மக்கள் தொகை கண்டிப்பாக அதிகரிக்கும். இந்தியாவில் சுகாதார பட்ஜெட் ஒதுக்கீடு 15% அதிகரித்துள்ளது. அதாவது 2018-19 ம் ஆண்டு 56,045 கோடியிலிருந்து 2019-20 ம் ஆண்டு 64,559 கோடியாக உயர்ந்துள்ளது’ என மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் செயலர் நந்தா தெரிவித்துள்ளார்