மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல்

3

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்காட்சி நிகழ்வொன்றிற்காக நேற்று மாணவர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவினாலே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.அதனால் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து மொரட்டுவை பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீபரவலினால் சில கற்றல் உபகரணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொலிஸார் மேற்படி விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.