ஐரோப்­பா­வையும் சீனா­வையும் இணைக்கும் 1,250 மைல் நீள­மான நெடுஞ்­சாலை

6

ரஷ்­யா­வா­னது ஐரோப்­பா­வையும் சீனா­வையும் இணைக்கும் வகையில் தனது பிராந்­தி­யத்­தினூடாக சீனா­வுக்கு 1,250 மைல்  நீள­மான நெடுஞ்­சாலையை  நிர்­மா­ணிப்­ப­தற்கு  அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது.

தனிப்­பட்ட ரீதியில் நிதி­வ­ச­தி­ய­ளிக்­கப்­பட்ட இந்த மெரி­டியன் நெடுஞ்­சாலை பெலா­ர­ஸு­ட­னான ரஷ்ய எல்­லை­யி­லி­ருந்து கஸ­கஸ்தான் வரை சென்று ஹம்பேர்க் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து சீனாவின் ஷங்காய் நகர் வரை விரி­வு­படும் நெடுஞ்­சாலை வலைப்­பின்­னலின் அங்­க­மாக  அமை­ய­வுள்­ளது.

சீன ஜனா­தி­பதி ஸி ஜின்­பிங்கின் பட்­டை­யொன்று பாதை­யொன்று திட்­டத்தின் அங்­க­மான இந்த நெடுஞ்­சா­லையை ஸ்தா­பிக்கும் திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தப் பாதை ஸ்தா­பிக்­கப்­பட்­டதும் அது ஐரோப்­பா­வுக்கும் சீனாவுக்­குமி­டையில் பொருட்­களை கொண்டு செல்­வ­தற்­கான குறு­கிய பாதை­யாக அமையும்.